/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நீரில் மூழ்கிய நெற்கதிர்கள் சாலை ஓரங்களில் குவிப்பு நீரில் மூழ்கிய நெற்கதிர்கள் சாலை ஓரங்களில் குவிப்பு
நீரில் மூழ்கிய நெற்கதிர்கள் சாலை ஓரங்களில் குவிப்பு
நீரில் மூழ்கிய நெற்கதிர்கள் சாலை ஓரங்களில் குவிப்பு
நீரில் மூழ்கிய நெற்கதிர்கள் சாலை ஓரங்களில் குவிப்பு
ADDED : ஜன 11, 2024 04:28 AM

திருவாடானை : வயலில் தேங்கிய மழை நீரிலிருந்து நெற்கதிர்களை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை சாலை ஓரங்களில் குவித்து தண்ணீரை வடியவிட்டு நெல்லை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் விவசாயம் முதன்மை தொழிலாக உள்ளது. இந்த ஆண்டு பெய்த பருவமழையால் சில கிராமங்களில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் நீரில் மூழ்கின.
பெல்ட் இயந்திரம் மூலம் அறுவடை பணிகள் நடக்கிறது.
வாடகை அதிகமாக இருப்பதால் சில கிராமங்களில் விவசாயிகள் கதிர் அறுக்கும் அரிவாள் பயன்படுத்தி அறுவடை செய்து நெற்கதிர்களை சாலை ஓரங்களில் அடுக்கி வைத்து தண்ணீர் வடிந்த பின் நெல்லை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குணபதிமங்கலம் விவசாயிகள் கூறியதாவது:
பண்டைய காலத்தில் மிகவும் திட்டமிட்ட முறையில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. உழுதல், விதைத்தல், உரமிடுதல், களை எடுப்பு, நீர்ப்பாசனம், பயிர் பாதுகாப்பு ஆகியவற்றை சரியான முறையில் கையாண்டதால் விவசாயிகள் செல்வந்தராக வாழ்ந்தனர்.
தற்போது பருவமழை மாற்றம், செலவு போன்ற பல்வேறு காரணங்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வயலில் நீரில் மூழ்கியிருந்த கதிர்களை கதிர் அரிவாள் பயன்படுத்தி அறுவடை செய்து கட்டாக கட்டி வைத்துள்ளோம்.
இதற்கு பெயர் கண்ணாம்பு கட்டு என்பார்கள். கதிர்களிலிருந்து தண்ணீர் வடிந்த பின் அவற்றை தரையில் தட்டி நெல் மணிகள் பிரித்து எடுக்கப்படும் என்றனர்.