/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குழந்தைகள் மையத்தில் ஆதார் வழங்கும் பணி குழந்தைகள் மையத்தில் ஆதார் வழங்கும் பணி
குழந்தைகள் மையத்தில் ஆதார் வழங்கும் பணி
குழந்தைகள் மையத்தில் ஆதார் வழங்கும் பணி
குழந்தைகள் மையத்தில் ஆதார் வழங்கும் பணி
ADDED : மே 31, 2025 11:17 PM
ராமநாதபுரம்:குழந்தைகள் மையத்தில் 2 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை சேர்க்கலாம். ஆதார் கார்டு வழங்கும் பணி நடக்கிறது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் உள்ள 1454 குழந்தைகள் மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி வழங்கப்படுகிறது.
இரண்டு முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முறைசாரா முன்பருவக் கல்வி, செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றால் கற்பிக்கப்படுகிறது.ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்கள்நடக்கிறது.
குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல தயார்படுத்தப் படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகள் தோறும் குழந்தைகள் சேர்க்கையைமேற்கொண்டுள்ளனர். எனவே, பெற்றோர் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சேர்க்கலாம்.குழந்தைகளுக்கான ஆதார் கார்டு வழங்கும் பணியும் நடக்கிறது என்றார்.