ADDED : மே 16, 2025 03:09 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் துறை சார்பில் அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் கடைகள், நிறுவனங்களில் தினமும் ஒரு திருக்குறள், அதன் உரையும் எழுத வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் தொழிலாளர் துறை அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மலர்விழி கூறியிருப்பதாவது:
திருவள்ளுவர் வெள்ளிவிழாவை முன்னிட்டு திருக்குறள், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுவது போன்று தனியார் நிறுவனங்கள், கடைகளும் எழுதுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மாவட்டத்தில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் திருக்குறளும், அதன் உரையும் எழுத வேண்டும். தொழில் நல்லுறவு பரிசிற்கான மதிப்பீடு செய்யும் போது சிறப்பு மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.