/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கருங்குடி ரோட்டை சீரமைக்க கோரிக்கை கருங்குடி ரோட்டை சீரமைக்க கோரிக்கை
கருங்குடி ரோட்டை சீரமைக்க கோரிக்கை
கருங்குடி ரோட்டை சீரமைக்க கோரிக்கை
கருங்குடி ரோட்டை சீரமைக்க கோரிக்கை
ADDED : மார் 23, 2025 04:00 AM

ஆர்.எஸ்.மங்கலம் : தேசிய நெடுஞ்சாலை கருங்குடி விலக்கு கிறிஸ்தவர் குடியிருப்பு செல்லும் ரோட்டை சீரமைக்க மக்கள் வலியுறுத்தினர்.
திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரம் விலக்கு எதிர் பகுதியில் இருந்து கருங்குடி கிறிஸ்தவர் குடியிருப்பு செல்வதற்கு 2 கி.மீ., ரோடு வசதி உள்ளது. இந்த ரோடு பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ரோட்டில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால் வாகனங்களில் செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும் ரோட்டை காரணம் காட்டி ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களும் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாலும், மழை நேரங்களில் வாடகை வாகனங்கள் வர மறுப்பதாலும் கிராமத்தினர் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.