/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வீட்டில் பதுக்கிய 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைதுவீட்டில் பதுக்கிய 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது
வீட்டில் பதுக்கிய 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது
வீட்டில் பதுக்கிய 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது
வீட்டில் பதுக்கிய 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது
ADDED : ஜன 25, 2024 04:59 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கடல் அட்டைகளை வீட்டில் பதுக்கிய சாகுல் அமீது 42, கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 30 கிலோ அவித்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மன்னார் வளைகுடா வன உயிரினப்பூங்கா பகுதியில் கடலில் கடல் அட்டைகள், கடல் குதிரைகள் உள்ளிட்டவை அரிய வகை உயிரினங்களின் பட்டியலில் உள்ளதால் அவற்றை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவிபட்டினத்தில் வீட்டில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக வன உயிரின காப்பாளர் ஜக்தீஸ் சுதாகர் பகானுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் வனரேஞ்சர் திவ்யலட்சுமி, பாரஸ்டர் ராஜேஷ்குமார், காவலர் பாலமுருகன் குழுவினர் தேவிபட்டினம் பெரியகடை வீதியில் காதர் உமர் மகன் சாகுல் அமீது 42, வீட்டில் சோதனையிட்டனர்.
அங்கு அவித்த 30 கிலோ கடல் அட்டைகள், அதை அவிக்க பயன்படுத்திய காஸ் சிலிண்டர், பாத்திரங்களை பறிமுதல் செய்து சாகுல் அமீதை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கடத்தல் வழக்கு உள்ளது.
சிக்கிய கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் என வனத்துறையினர் கூறினர்.