Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அதிகாரிகளை கண்டித்து தற்கொலை செய்வதற்கு கலெக்டரிடம் அனுமதி கேட்ட தி.மு.க., நிர்வாகி

அதிகாரிகளை கண்டித்து தற்கொலை செய்வதற்கு கலெக்டரிடம் அனுமதி கேட்ட தி.மு.க., நிர்வாகி

அதிகாரிகளை கண்டித்து தற்கொலை செய்வதற்கு கலெக்டரிடம் அனுமதி கேட்ட தி.மு.க., நிர்வாகி

அதிகாரிகளை கண்டித்து தற்கொலை செய்வதற்கு கலெக்டரிடம் அனுமதி கேட்ட தி.மு.க., நிர்வாகி

ADDED : ஜன 09, 2024 12:03 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் ; பட்டா கேட்டு 18 ஆண்டுகளாக மனு அளித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகளின் செயலால் மனமுடைந்த தி.மு.க., நிர்வாகி பால்பாண்டி வாழ வழியின்றி தற்கொலை செய்வதற்கு அனுமதி கேட்டு ராமநாதபுரத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கவிராயபுளியங்குளம்தி.மு.க., கிளை செயலாளர் சி.பால்பாண்டி 56, கூறியதாவது:

பரமக்குடி ஒன்றியம்நெல்மடூர் ஊராட்சித் தலைவராக இருந்துள்ளேன். 2014ல் லோக்சபா, 2016 சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டேன். தற்போது தி.மு.க., கிளைச்செயலாளராக உள்ளேன். நெல்மடூர் ஊராட்சியில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது.

இதுகுறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தும் அதிகாரிகள்நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் நத்தம் புறம்போக்கு இடத்தில் 18ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருக்கிறேன். பட்டா வழங்காமல்அலையவிடுகின்றனர். மாவட்ட தொழில் மையம் கடன் வழங்குமாறு கடிதம் அளித்தும் வங்கிகள் தர மறுக்கின்றன.

தற்போதுள்ள அரசு அதிகாரிகள் எந்த வேலையும் செய்வது இல்லை. இது தொடர்பாகஅமைச்சர், எம்.எல்.ஏ., கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

இதையடுத்து கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் 18 ஆண்டுகளாக பட்டாவழங்க மறுக்கும் அதிகாரிகளை கண்டித்து ஜன.,26 குடியரசு தினத்தில்கலெக்டர் அலுவலகத்தில் கொடியேற்றும்போது விஷம் குடித்துதற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனகண்ணீர் மல்க மனு அளித்தார்.

அவரிடம் கலெக்டர் விஷ்ணு சந்திரன், அதுபோல் செய்வது தவறு. மனு குறித்தும்நானே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us