/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காலை 8:00 -- இரவு 8:00 மணி வரை தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை காலை 8:00 -- இரவு 8:00 மணி வரை தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை
காலை 8:00 -- இரவு 8:00 மணி வரை தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை
காலை 8:00 -- இரவு 8:00 மணி வரை தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை
காலை 8:00 -- இரவு 8:00 மணி வரை தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை
ADDED : ஜன 07, 2024 04:18 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி தலைமை தபால் அலுவலகங்களில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் சேவை வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியதாவது:
மாவட்டத்தில் 31 தபால்அலுவலகங்களில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.அதனை மேம்படுத்தவும், பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு ராமநாதபுரம், பரமக்குடி தலைமை அஞ்சல் அலுவலகங்களில் மட்டும் ஆதார் சேவை காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஜன.5 முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த நேர நீட்டிப்பால் மக்கள்விருப்பமான நேரங்களில் ராமநாதபுரம்,பரமக்குடி தலைமை தபால் அலுவலகங்களுக்கு சென்று ஆதார் சேவையை பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.