/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில் 6086 பேருக்கு முழு உடல் பரிசோதனை 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில் 6086 பேருக்கு முழு உடல் பரிசோதனை
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில் 6086 பேருக்கு முழு உடல் பரிசோதனை
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில் 6086 பேருக்கு முழு உடல் பரிசோதனை
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில் 6086 பேருக்கு முழு உடல் பரிசோதனை
ADDED : செப் 09, 2025 10:54 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாமில் 6086 பேருக்குமுழு உடல் பரிசோதனை செய்யப் பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் வாரந்தோறும் சனிக்கிழமையில் இந்த மருத்துவ முகாம் நடக்கிறது. கடந்த 5 வாரம் நடைபெற்ற சிறப்பு முகாமில் 6086 பேர் முழு உடல் பரிசோதனை செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜூன் கூறியதாவது:
நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில் பரிசோதனை செய்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரிக்கிறது. இதுவரை நடந்த 5 முகாம்களில் 3000 பேர் இ.சி.ஜி., பரிசோதனையும், 518 பேர் எக்ஸ்ரே பரிசோதனையும், 1031 பேர் இதய பரிசோதனையும் செய்துள்ளனர்.
குழந்தைகள் 195 பேர், மகளிர் 300 பேர், தொழிலாளர் நலத்துறை மூலம் 1400 பேர், துாய்மைப் பணியாளர்கள் 530 பேர் பரிசோதனை செய்துள்ளனர்.
தனிப்பட்ட பிரச்னைகளாக கண் சார்ந்து 992 பேர், காது மூக்கு தொண்டை சார்ந்து 540 பேர், எலும்பு நோய் சார்ந்து 680 பேர், மனநோய் சார்ந்து 100 பேர், தோல் நோய் சார்ந்து 385 பேர், நுரையீரல் நோய் சார்ந்து 212 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ் பிரிவில் 548 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அனைவருக்கும் பொது மருத்துவர் சார்பில் அறிவுரை வழங்கப்படுகிறது.
உயர் சிகிச்சை தேவைப்படுவோர் மருத்துவனையில் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுகிறார்கள். உயர் சிகிச்சை பெற 400 பேருக்கு முதல்வர் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக வரும் சனிக்கிழமை (செப்.13) சாயல்குடியில் மருத்துவ முகாம் நடைபெறும். இதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறலாம் என்றார்.