Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காஞ்சிரங்குடி மேலவலசையில் வடமாடு எருதுகட்டு விழா 55 காளைகள் பங்கேற்றன

காஞ்சிரங்குடி மேலவலசையில் வடமாடு எருதுகட்டு விழா 55 காளைகள் பங்கேற்றன

காஞ்சிரங்குடி மேலவலசையில் வடமாடு எருதுகட்டு விழா 55 காளைகள் பங்கேற்றன

காஞ்சிரங்குடி மேலவலசையில் வடமாடு எருதுகட்டு விழா 55 காளைகள் பங்கேற்றன

ADDED : செப் 18, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
கீழக்கரை : கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலவலசையில் பழமை வாய்ந்த பொன் சிறை எடுத்த அய்யனார் கோயில் உள்ளது. 265ம் ஆண்டு எருதுகட்டு விழாவை முன்னிட்டு மூலவர் பூரண புஷ்கலா சமேத பொன் சிறை எடுத்து அய்யனாருக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தும் கோழி, சேவல்களை நேர்த்திக்கடனாக விட்டும் வழிபாடு செய்தனர்.

நேற்று மதியம் 1:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை கோயில் முன்பாக உள்ள திடலில் வடமாடு எருது கட்டு விழா நடந்தது. பனை மட்டை நாரின் மூலமாக திரிக்கப்பட்ட நுாறு அடி நீளம் கொண்ட வடகயிற்றினை காளையின் ஒரு கழுத்தில் கட்டி மற்றொரு புறத்தை ஏராளமான மாடுபிடி வீரர்கள் கையில் பிடித்துக் கொண்டும் சென்றனர்.

குறிப்பிட்ட துாரத்தில் மாட்டின் திமிலை பிடித்து வீரர்கள் மாட்டை அடக்கினர்.

ராமநாதபுரம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 55 காளைகள் கலந்து கொண்டன. கீழக்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக மைதானத்தை சுற்றிலும் தடுப்பு வேலி கம்பங்கள் நடப்பட்டிருந்தன.

இன்று மதியம் 1:00 மணிக்கு அன்னதானம், வடம் ஏற்றி சுவாமி கும்பிடும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை மேலவலசை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us