ADDED : செப் 17, 2025 12:30 AM

கமுதி : கமுதி அருகே செங்கப்படையில் அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி பொங்கல், முளைப்பாரி விழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது. இதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் 508 விளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு 108 போற்றி மந்திரங்கள் கூறி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பின்பு அழகு வள்ளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.