/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்கள் கைதுகஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்கள் கைது
கஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்கள் கைது
கஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்கள் கைது
கஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்கள் கைது
ADDED : பிப் 10, 2024 11:49 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்பாஸ்கரன், எஸ்.ஐ., விஷ்ணுவர்தன் ஆகியோர் ரோந்து சென்றனர். நோக்கன்கோட்டை விலக்கு அருகே பெரிய கண்மாய் கரையில் அமர்ந்திருந்த சில இளைஞர்கள் பிளாஸ்டிக் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்களை வைத்து புகைத்துக் கொண்டிருந்தனர்.
போலீசை கண்டதும் தப்ப முயன்றனர். அப்போது போலீசார் மடக்கிப் பிடித்த போது இளைஞர்கள் போலீசாரை கீழே தள்ளிவிட்டு ஓடினர். தொடர்ந்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த கரண் 23, வெங்கடேஷ் 23, மதன்குமார் 22, ஹரிஹரசுதன் 25, முகமது நப்பீஸ் 23, என தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஐந்து இளைஞர்களையும் கைது செய்தனர்.