ADDED : செப் 09, 2025 11:02 PM

தொண்டி; கேரளா மாநிலத்தை சேர்ந்த நான்கு ஆண்கள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் காரில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள தர்காவை நோக்கி சென்றனர்.
தொண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது நேற்று காலை 11:00 மணிக்கு நாரேந்தல் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஐந்து பேரும் லேசான காயமடைந்தனர். அந்த வழியாக சென்ற சிலர் அவர்களை மீட்டனர். ஐந்து பேரும் மற்றொரு காரில் முத்துபேட்டையை நோக்கி சென்றனர். சேத மடைந்த கார் சம்பவ இடத்தில் உள்ளது.