/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இந்திய லங்காடி அணிக்காக தமிழகத்தில் 4 பேர் தேர்வு இந்திய லங்காடி அணிக்காக தமிழகத்தில் 4 பேர் தேர்வு
இந்திய லங்காடி அணிக்காக தமிழகத்தில் 4 பேர் தேர்வு
இந்திய லங்காடி அணிக்காக தமிழகத்தில் 4 பேர் தேர்வு
இந்திய லங்காடி அணிக்காக தமிழகத்தில் 4 பேர் தேர்வு
ADDED : ஜூன் 19, 2025 10:36 PM

முதுகுளத்துார்:நேபாளத்தில் சர்வதேச அளவில் நடக்கும் லங்காடி போட்டிக்கு இந்திய அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த தேவசித்தம் தலைமையில் 40 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய லங்காடி அணிக்கு வீரர்கள் தேர்வு பல்வேறு மாநிலங்களில் நடந்தது. சிறப்பாக விளையாடிய தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என 40 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நேபாளத்தில் ஜூலை 1ல் சர்வதேச அளவில் நடைபெறும் லங்காடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தேவசித்தம், மதுரை மாவட்டம் சரண், திண்டுக்கல் மாவட்டம் நெல்சன், திருச்சி மாவட்டம் நந்தினி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களுடன் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 40 வீரர்கள் விளையாட உள்ளனர்.
இதுகுறித்து லங்காடி அணி தலைவர் தேவசித்தம் கூறியதாவது: நேபாளத்தில் நடக்கும் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்போம். லங்காடி விளையாட்டானது பள்ளி கல்வித்துறை மற்றும் கேலோ இந்திய விளையாட்டு போட்டிகளிலும் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் உள்ளதால் விரைவில் இந்திய விளையாட்டு அமைச்சகம் லங்காடி விளையாட்டை அங்கீகரிக்கும் என்றார்.
இந்த வீரர்களுக்கு லங்காடி விளையாட்டு குழும தலைவர் பாலு, துணைத்தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.