/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சித்திரை திருவிழாவில் 31 பவுன் செயின் திருட்டு சித்திரை திருவிழாவில் 31 பவுன் செயின் திருட்டு
சித்திரை திருவிழாவில் 31 பவுன் செயின் திருட்டு
சித்திரை திருவிழாவில் 31 பவுன் செயின் திருட்டு
சித்திரை திருவிழாவில் 31 பவுன் செயின் திருட்டு
ADDED : மே 13, 2025 05:04 AM
பரமக்குடி : பரமக்குடி சித்திரை திருவிழாவில் பெண்ணிடம் 31 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் வெளிநாட்டில் இருந்து தற்போதுஊருக்கு வந்துள்ளார்.
இவரது மனைவி ராதா 60. இருவரும் சித்திரை திருவிழாவை காண்பதற்காக வைகை ஆற்றுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர்.
நேற்று அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் சாமி கும்பிட்டு விட்டு டூவீலரில் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஆற்றுப்பாலம் அருகே அன்னதானம் வாங்குவதற்காக ராதா சென்றுள்ளார். வாங்கிவிட்டு திரும்பி வந்தபோது கழுத்தில் அணிந்திருந்த தாலி உள்ளிட்ட செயின் 31 பவுன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
திருடியது யார் என்பது தெரியவில்லை. பரமக்குடி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.