/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/18 பணியிடத்திற்கு 3000 விண்ணப்பங்கள் சான்றிதழ்களுடன் குவிந்த பட்டதாரிகள்18 பணியிடத்திற்கு 3000 விண்ணப்பங்கள் சான்றிதழ்களுடன் குவிந்த பட்டதாரிகள்
18 பணியிடத்திற்கு 3000 விண்ணப்பங்கள் சான்றிதழ்களுடன் குவிந்த பட்டதாரிகள்
18 பணியிடத்திற்கு 3000 விண்ணப்பங்கள் சான்றிதழ்களுடன் குவிந்த பட்டதாரிகள்
18 பணியிடத்திற்கு 3000 விண்ணப்பங்கள் சான்றிதழ்களுடன் குவிந்த பட்டதாரிகள்
ADDED : ஜன 03, 2024 06:04 AM

ராமநாதபுரம்,: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களின்சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடந்தது. இதில் 18 பணியிடங்களுக்கு 3000 பேர் விண்ணப்பித்த நிலையில் சான்றிதழ்களுடன் பட்டதாரிகள் குவிந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில்ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், டிரைவர்,இரவு காவலர் என18 பணியிடங்கள் நேரடி நியமனத்தில் நிரப்பப்பட உள்ளது.எட்டாம் வகுப்பு தேர்ச்சி தகுதிக்கு பி.ஏ., பி.இ., பட்டதாரிகள் என3000 பேர் வரைவிண்ணப்பித்துள்னர்.
நேற்று கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடந்தது. இதில் பெண்கள் தங்களது குழந்தைகளைகணவர், உறவினர் வசம் ஒப்படைத்துவிட்டு சான்றிதழ்களுடன் பங்கேற்றனர்.
தொடர்ந்து 5 நாட்கள் சான்றிதழ் சரிபார்க்கும் பணிநடக்கிறது. அதன் பிறகு தகுதியானவர்களுக்கு பணி நியமனம்வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.