Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 300 ஆண்டுகளான பழமை வாய்ந்த வேட்டை மண்டபம்: புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

300 ஆண்டுகளான பழமை வாய்ந்த வேட்டை மண்டபம்: புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

300 ஆண்டுகளான பழமை வாய்ந்த வேட்டை மண்டபம்: புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

300 ஆண்டுகளான பழமை வாய்ந்த வேட்டை மண்டபம்: புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

ADDED : செப் 29, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே கீழச்சீத்தை செல்லும் வழியில் ஊருணி கரையோரம் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேட்டை மண்டபம் பராமரிப்பின்றி இடிபாடுகளுடன் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

வேட்டை மண்டபம் மேல் துாண்கள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் அபாயத்துடன் காணப்படுவதால் இதனருகே செல்வதற்கு கூட பொதுமக்கள் அச்சம்காட்டுகின்றனர்.

நவராத்திரி உற்ஸவ விழாவின் நிறைவு நாளான விஜயதசமி அன்றைய தினம் உத்தரகோசமங்கையில் இருந்து மேளதாளங்கள் முழங்க உற்ஸவர் சந்திரசேகர சுவாமி யானை வாகனத்தில் வேட்டை மண்டபத்தின் அருகே வந்து வில்லில் இருந்து அம்பு எய்துவிட்டு பின்னர் கோயிலுக்கு திரும்புவது வழக்கம்.

எனவே பழமை மாறாமல் வேட்டை மண்டபத்தை வரக்கூடிய தலைமுறைகள் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு செய்ய வேண்டும்.

மண்டபத்தின் நடுப்பகுதியில் அரசமரம் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. எனவே பாரம்பரியமிக்க பழமையான வேட்டை மண்டபத்தை மீட்டெடுத்து மராமத்து பணிகளை செய்ய செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us