/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இறந்து கரை ஒதுங்கிய 300 கிலோ கடல்பசுஇறந்து கரை ஒதுங்கிய 300 கிலோ கடல்பசு
இறந்து கரை ஒதுங்கிய 300 கிலோ கடல்பசு
இறந்து கரை ஒதுங்கிய 300 கிலோ கடல்பசு
இறந்து கரை ஒதுங்கிய 300 கிலோ கடல்பசு
ADDED : செப் 19, 2025 08:18 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரையில் 300 கிலோ அரியவகை கடல் பசு இறந்து கரை ஒதுங்கியது.
மன்னார் வளைகுடா கடலில் அரியவகை கடல் அட்டைகள், ஆமைகள், கடல் பசுக்கள், டால்பின்கள் உள்ளிட்டவை வசிக்கின்றன. இந்நிலையில் சேதுக்கரை கடலில் கிழக்குப் பகுதியில் கரையோரம் 8 வயதுள்ள 300 கிலோ பெண் கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கீழக்கரை வனச்சரகர் கவுசிகா, வனவர் காளிதாஸ் ஆகியோர் கால்நடை மருத்துவர் மூலம் கடல் பசு உடலை பரிசோதனை செய்து அப்பகுதியில் புதைத்தனர். அதன் அறிக்கை வந்தபின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.