/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானை கல்லுாரியில் 279 இடங்கள் காலி:மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு திருவாடானை கல்லுாரியில் 279 இடங்கள் காலி:மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
திருவாடானை கல்லுாரியில் 279 இடங்கள் காலி:மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
திருவாடானை கல்லுாரியில் 279 இடங்கள் காலி:மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
திருவாடானை கல்லுாரியில் 279 இடங்கள் காலி:மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 18, 2025 11:36 PM
திருவாடானை: திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் உள்ள பட்டப்படிப்பு வகுப்புகளில் 279 இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், காட்சி தொடர்பியல், பி.காம்., தமிழ் வழி, பி.காம்., ஆங்கில வழி ஆகிய பட்டப்படிப்புகள் உள்ளன. மாணவர்கள் சேர்க்கைக்காக ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன்2 ல் கலந்தாய்வு துவங்கியது.
கலந்தாய்வில் 82 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இன்னும் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் காலி இடங்கள் உள்ளன. இது குறித்து கல்லுாரி முதல்வர் பழனியப்பன் கூறியதாவது:
கடந்த 16 நாட்களாக கல்லுாரியில் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது. ஆனால் அனைத்து பாடப்பிரிவுகளிலும் இடங்கள் காலியாக உள்ளன. பி.ஏ., தமிழ் 37, பி.ஏ., ஆங்கிலம் 56, பி.எஸ்சி., கணிதம் 35, கணினி அறிவியல் 33, காட்சி தொடர்பியல் 39, பி.காம் தமிழ் வழி 31, பி.காம்., ஆங்கிலம் 48 பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன.
மாணவர்கள் கல்லுாரியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு இல்லாமல் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளுக்கு உடனே சேர்க்கப்படுவார்கள். ஆக., வரை மாணவர்கள் சேர்க்கை உண்டு என்றார்.