/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட 250 பேர்தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட 250 பேர்
தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட 250 பேர்
தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட 250 பேர்
தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட 250 பேர்
ADDED : ஜன 03, 2024 05:54 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தீயணைப்புத்துறை சார்பில் 2023ல் 250 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 2.87கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீ விபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 11 இடங்களில் தீயணைப்புநிலையங்கள் உள்ளன. 2023ல் 530 சிறு தீ விபத்துக்கள், 6 நடுத்தர தீ விபத்துக்கள், ஒரு பெரிய விபத்து என 537 தீ விபத்துக்கள் நடந்துள்ளன. 31.85 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. 2 கோடியே 87 லட்சத்து 26 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
தீ விபத்தில் சிக்கியவர்களில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 2252 பிற விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 21 பேர் பலியாகினர். 247 பேர் காப்பாற்றப்பட்டனர். 1785 விலங்கினங்கள் விபத்துக்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. 14 விலங்கினங்கள் இறந்துள்ளன என தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் தெரிவித்துள்ளனர்.