/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2.50 கோடிபோதை மாத்திரைகள் பறிமுதல்இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2.50 கோடிபோதை மாத்திரைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2.50 கோடிபோதை மாத்திரைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2.50 கோடிபோதை மாத்திரைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2.50 கோடிபோதை மாத்திரைகள் பறிமுதல்
ADDED : பிப் 06, 2024 03:15 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கைக்கு கடத்தயிருந்த ரூ.2.50 கோடி மதிப்பிலான 7 லட்சம் போதை மாத்திரைகள், பதிவெண் இல்லாத படகை பறிமுதல் செய்து முகமது மீராசா 42, என்பவரை மரைன் போலீசார் கைது செய்தனர். தப்பியவர்களை தேடி வருகின்றனர்.
பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுத்துறையினர், மரைன் போலீசார் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லாத படகில் 12 பெட்டிகளை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். இதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் பெரியபட்டினம் கிழக்கு தெரு அக்பர் அலி மகன் முகமது மீராசா என தெரிய வந்தது. படகில் 7 லட்சம் 'ப்ரீகாபா' என்ற வலி நிவாரணி மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த இருந்ததாக அவர் தெரிவித்தார். இந்த வகை மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்த இலங்கைக்கு அனுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மதிப்பு ரூ.2.50 கோடி. 10 மாத்திரை கொண்ட அட்டைகளை இலங்கை கடலோரப்பகுதிகளில் ரூ.600க்கும், திரிகோணமலை, நீர் கொழும்பு, கண்டி, வல்வெட்டித்துறை மாகாணங்களில் ரூ.800க்கும் விற்பனை செய்யப்படுவதும் விசாரணையில் தெரிய வந்தது. 12 பெட்டிகளில் இருந்த மாத்திரைகளையும், பதிவெண் இல்லாத படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடரும் கடத்தல்
தொடர்ந்து இப்பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது நடக்கிறது.
கடத்தலில் தொடர்புடைய இப்பகுதியைச் சேர்ந்த முக்கிய நபர்களை போலீசார் தப்பவிட்டுள்ளனர். கடத்தல் கும்பலை முழுமையாக கைது செய்ய மரைன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.