/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா
ADDED : ஜூன் 12, 2025 01:52 AM
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
மண்டபம் வெள்ளரி ஓடை பகுதியை சேர்ந்த 74 வயது முதியவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டது. அவர் உரிய சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். பட்டணம்காத்தான் பகுதியில் 56 வயது பெண் ஒருவருக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இவர்கள் இருவரையும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.