/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
ADDED : ஜன 29, 2024 05:26 AM
திருவாடானை: இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யும் மனுக்களுக்கு பாண்டு (பத்திரம்) வழங்கவில்லை. நிதியும் கிடைக்கவில்லை என பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
1992 ஆம் ஆண்டு இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தையும் பிறந்தால் ரூ.25ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் விண்ணப்பித்துள்ள 100க்கும் மேற்பட்டோர் இரு ஆண்டுகளாக நிதி கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
சிலருக்கு பத்திரம் வழங்கவில்லை. இதனால் நிதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலையில் உள்ளனர்.
இது குறித்து திருவாடானை அருகே செக்காந்திடலை சேர்ந்த பெண்கள் கூறியதாவது: இரு பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பம் செய்து இரு ஆண்டுகளாக நிதி வரவில்லை. மீண்டும் மீண்டும் விண்ணப்பம் கொடுத்தோம் ரசீது மட்டும் வழங்கபட்டது. பத்திரம் வழங்கவில்லை என்றனர்.
இது குறித்து ராமநாதபுரம் சமூக நலத்திட்ட அலுவலர்கள் கூறியதாவது: அனைத்து மனுக்களும் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது. பத்திரம் கிடைக்காதது குறித்து தெரியவில்லை. நிதி ஒதுக்கீட்டிற்கு பின்பு தகுதியுள்ளவர்களுக்கு தொகை வழங்கப்படும் என்றனர்.