/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/2 நாட்களாக காத்திருப்பு போராட்டம் பணி பாதிப்பால் கடலாடியில் மக்கள் சிரமம்2 நாட்களாக காத்திருப்பு போராட்டம் பணி பாதிப்பால் கடலாடியில் மக்கள் சிரமம்
2 நாட்களாக காத்திருப்பு போராட்டம் பணி பாதிப்பால் கடலாடியில் மக்கள் சிரமம்
2 நாட்களாக காத்திருப்பு போராட்டம் பணி பாதிப்பால் கடலாடியில் மக்கள் சிரமம்
2 நாட்களாக காத்திருப்பு போராட்டம் பணி பாதிப்பால் கடலாடியில் மக்கள் சிரமம்
ADDED : பிப் 24, 2024 05:47 AM
கடலாடி : கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு கடந்த இரண்டு நாட்களாக கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடப்பதால் அலுவலகங்களில் பணிகள் பாதிப்பால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வருவாய்த்துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து இரண்டு நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
கடலாடி வட்டக்கிளை தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். சீனி முகம்மது முன்னிலை வகித்தார். தாசில்தார் ரெங்கராஜ் உட்பட அலுவலக உதவியாளர்கள் வரை அலுவலக வாயிலின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று கீழக்கரை தாலுகா அலுவலகத்திலும் கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வருவாய்த் துறை சார்பில் நடக்கும் அனைத்து பணிகளும் இரண்டு நாட்களாக முடங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.