/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; 16,412 பேர் எழுதுகின்றனர் 82 மையங்களில் கண்காணிக்க 860 பேர் நியமனம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; 16,412 பேர் எழுதுகின்றனர் 82 மையங்களில் கண்காணிக்க 860 பேர் நியமனம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; 16,412 பேர் எழுதுகின்றனர் 82 மையங்களில் கண்காணிக்க 860 பேர் நியமனம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; 16,412 பேர் எழுதுகின்றனர் 82 மையங்களில் கண்காணிக்க 860 பேர் நியமனம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; 16,412 பேர் எழுதுகின்றனர் 82 மையங்களில் கண்காணிக்க 860 பேர் நியமனம்
ADDED : மார் 26, 2025 05:11 AM
ராமநாதபுரம் : பத்தாம் வகுப்புஅரசு பொத்தேர்வுகள் மார்ச் 28 (நாளை மறுநாள்) துவங்க உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில்16,412 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இதற்காக 82 மையங்களில் அடிப்படை வசதிகளுடன் முன்னேற்பாடுகள் நடக்கிறது. 860 பேர் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் துவங்கி ஏப்.15 வரை நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 70, உதவி பெறும் பள்ளிகள் -37, தனியார் பள்ளிகள் -52, மாதிரி பள்ளி-1 என 156 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 120 பேர், தனித்தேர்வாளர்கள் 458 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
இதற்காக115 பேர் கொண்ட பறக்கும் படையினர் மற்றும் நிலைத்த படை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோக வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் காப்பாளர், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வு நடைபெறும் 82 மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
வினாத்தாள் வைத்துள்ள இடங்களில் 24 மணி நேரம் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தேர்வு காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது.
மாற்றுத்திறனாளியான மூளை வளர்ச்சி குன்றிய மாணவருக்கு மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.----------