/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வைக்கோலுக்கு தீ வைப்பு 15 ஆடுகள் கருகி பலிவைக்கோலுக்கு தீ வைப்பு 15 ஆடுகள் கருகி பலி
வைக்கோலுக்கு தீ வைப்பு 15 ஆடுகள் கருகி பலி
வைக்கோலுக்கு தீ வைப்பு 15 ஆடுகள் கருகி பலி
வைக்கோலுக்கு தீ வைப்பு 15 ஆடுகள் கருகி பலி
ADDED : பிப் 25, 2024 05:55 AM
பரமக்குடி, : -பரமக்குடி அருகே பாம்பூர் கிராமத்தில் வயல்வெளியில் வைக்கோலுக்கு தீ வைத்த போது அருகில் கிடை அமைத்து அடைக்கப்பட்டிருந்த 15 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலியானது.
பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக் கண்ணன். இவர் 150 ஆடுகள் வளர்த்து வரும் நிலையில் நேற்று காலை 15 ஆட்டுக்குட்டிகளை மட்டும் கிடையில் அடைத்துவிட்டு பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.
அப்போது அருகில் உள்ள வயலில் நெல் அறுவடைக்கு பின் அந்த வயலின் உரிமையாளர் ஹரிகிருஷ்ணன் கழிவு வைக்கோலை தீயிட்டு எரித்துள்ளார். இந்த தீ காற்றின் வேகத்தில் பரவியதில் அருகில் கிடையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 ஆட்டு குட்டிகள் தீயில் கருகி பலியானது.
கால்நடை மருத்துவர்கள் இறந்த ஆட்டுக்குட்டிகளை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். இதுகுறித்து முத்து கண்ணன் பரமக்குடி தாலுகா போலீலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.