/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தமிழ்புலிகள் கட்சியினர் 110 பேர் கைது போலீசாருடன் தள்ளுமுள்ளு தமிழ்புலிகள் கட்சியினர் 110 பேர் கைது போலீசாருடன் தள்ளுமுள்ளு
தமிழ்புலிகள் கட்சியினர் 110 பேர் கைது போலீசாருடன் தள்ளுமுள்ளு
தமிழ்புலிகள் கட்சியினர் 110 பேர் கைது போலீசாருடன் தள்ளுமுள்ளு
தமிழ்புலிகள் கட்சியினர் 110 பேர் கைது போலீசாருடன் தள்ளுமுள்ளு
ADDED : ஜூன் 05, 2025 12:59 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ்புலிகள் கட்சி சார்பில் இளமனுாரில் அருந்ததியினர் மக்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அனைவரையும் கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிர்வாகிகள் உட்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே இளமனுாரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சிலரை மட்டும் கைது செய்து விட்டு பலர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சிலர் இளமனுார் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை தருவதாக புகார் தெரிவித்து தமிழ்புலிகள் கட்சி சார்பில் ஊர்மக்களுடன் இணைந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பின் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். இதையடுத்து ராமநாதபுரம் தாசில்தார் ரவி, டி.எஸ்.பி., முருகதாஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஊருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதில் சமரசம் ஏற்படாததால் தமிழ்புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் ரஞ்சித், சுரேஷ், ராஜா, சூரப்பாண்டி நிர்வாகிகள் மற்றும் 34 பெண்கள் உட்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.