/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காட்சிப்பொருளான சுத்திகரிப்பு மையம் திருவாடானையில் ரூ.10 லட்சம் வீண்காட்சிப்பொருளான சுத்திகரிப்பு மையம் திருவாடானையில் ரூ.10 லட்சம் வீண்
காட்சிப்பொருளான சுத்திகரிப்பு மையம் திருவாடானையில் ரூ.10 லட்சம் வீண்
காட்சிப்பொருளான சுத்திகரிப்பு மையம் திருவாடானையில் ரூ.10 லட்சம் வீண்
காட்சிப்பொருளான சுத்திகரிப்பு மையம் திருவாடானையில் ரூ.10 லட்சம் வீண்
ADDED : ஜன 07, 2024 04:15 AM

திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையம் செயல்படாமல் காட்சி பொருளாகியுள்ளது.
திருவாடானையில் அரசு மருத்துவமனை உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 42 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனைக்கு திருவாடானை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கருணாஸ் நிதியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டு பராமரிப்பின்றி செயல்படாமல் உள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவர்களுடன் வருபவர்கள் வெளியே பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். நோயாளிகள் கூறியதாவது:
மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறைக்கு முன்புள்ள முகம் கழுவும் பேஷனில் தண்ணீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
இரவில் கொசுக்கடியால் உள் நோயாளிகள் துாக்கமில்லாமல் தவிக்கின்றனர். அடிக்கடி குடிநீர் சப்ளை இல்லாததால் சாப்பாட்டிற்கு பின் கை கழுவ கூட தண்ணீர் கிடைக்கவில்லை.
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்பாடில்லாமல் உள்ளது. கலெக்டர் மற்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு முறையாவது மருத்துவமனையை பார்வையிட்டு நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.