/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வறுமை ஒழிப்பை வலியுறுத்தி இளைஞர் நடைபயணம் வறுமை ஒழிப்பை வலியுறுத்தி இளைஞர் நடைபயணம்
வறுமை ஒழிப்பை வலியுறுத்தி இளைஞர் நடைபயணம்
வறுமை ஒழிப்பை வலியுறுத்தி இளைஞர் நடைபயணம்
வறுமை ஒழிப்பை வலியுறுத்தி இளைஞர் நடைபயணம்
ADDED : ஜூலை 24, 2024 10:16 PM

ராமநாதபுரம்:சென்னையைச் சேர்ந்த எஸ்.கோவிந்த் சந்திரா, 31, என்பவர், வறுமை நீங்கி, ஏழைகளே இல்லாத உலகை உருவாக்க வலியுறுத்தி, தினமும் 40 கி.மீ., பிரசார நடைபயணம் மேற்கொள்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் இருந்து சென்னைக்கு அவர் நடைபயணத்தை, சமீபத்தில் துவக்கினார்.
நேற்று ராமநாதபுரம் வந்தவர் கூறியதாவது:
ஐக்கிய நாடுகள் சபையின், '2030ல் வறுமை இல்லா உலகம்' என்ற திட்டத்தின் கீழ், ஐ.நா வெளியிட்ட கொடியுடன் பிரசார நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். ஒருவரின் மாத சம்பளத்தில், 1 சதவீதம் பணத்தை வழங்கினால் அப்பணம் ஒருவரை வறுமையில் இருந்து மீட்க உதவும் என்பதே நடைபயணத்தின் நோக்கம்.
தினமும் 40 கி.மீ., நடக்க உள்ளேன். ஆறரை ஆண்டுகளில், 195 நாடுகளுக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளேன். 2030 டிச., 31ல் அப்துல்கலாம் நினைவகத்தில் நடைபயணத்தை முடிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.