/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உலக தண்ணீர் தினம் கிராமசபை கூட்டம் உலக தண்ணீர் தினம் கிராமசபை கூட்டம்
உலக தண்ணீர் தினம் கிராமசபை கூட்டம்
உலக தண்ணீர் தினம் கிராமசபை கூட்டம்
உலக தண்ணீர் தினம் கிராமசபை கூட்டம்
ADDED : மார் 14, 2025 07:07 AM
திருவாடானை: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 23 ல் கிராம சபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாடானை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் கூறியதாவது:
ஆண்டுதோறும் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 23 ல் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், தண்ணீர் மாசுபாட்டை தடுத்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றுதல், நீர் வழித்தடங்களை துார்வாருதல்.
குழந்தைகளிடத்தில் நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார்.
---