ADDED : மார் 12, 2025 01:14 AM
ராமநாதபுரம்; செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் ராமநாதபுரம் புனித ஆரோக்கிய பெண்கள் பள்ளி, தேவிபட்டினம் அரசுப்பள்ளியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. செய்யது அம்மாள் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத்தலைவர் பிரபாவதி வரவேற்றார்.
கல்லுாரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பாலமுருகன், ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று மகளிர் உரிமைகள் குறித்து பேசினர். ராமநாதபுரத்தில் போலீசார் சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் முதல், இரண்டாம் இடம் பெற்ற கல்லுாரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கல்லுாரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆங்கிலத்துறை தலைவர் சத்தியவதி நன்றி கூறினார்.