/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானையில் வாரந்தோறும் பெட்டிஷன் மேளா: எஸ்.பி., தகவல் திருவாடானையில் வாரந்தோறும் பெட்டிஷன் மேளா: எஸ்.பி., தகவல்
திருவாடானையில் வாரந்தோறும் பெட்டிஷன் மேளா: எஸ்.பி., தகவல்
திருவாடானையில் வாரந்தோறும் பெட்டிஷன் மேளா: எஸ்.பி., தகவல்
திருவாடானையில் வாரந்தோறும் பெட்டிஷன் மேளா: எஸ்.பி., தகவல்
ADDED : ஜூன் 11, 2024 10:53 PM
திருவாடானை : திருவாடானையில் வாரந்தோறும் நடைபெறும் பெட்டிஷன் மேளாவில் மக்கள் புகார் செய்யலாம் என எஸ்.பி.சந்தீஷ் பேசினார்.
திருவாடானை சப்-டிவிசனில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, தொண்டி, எஸ்.பி.பட்டினம் ஆகிய போலீஸ்ஸ்டேஷன் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்கும் வகையில் பெட்டிஷன் மேளா திருவாடான டி.எஸ்.பி. அலுவலகத்தில் நடந்தது.
எஸ்.பி.சந்தீஷ் தலைமை வகித்தார். 20க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறபட்டது. இதில் பணம் கொடுக்கல் வாங்கல், பணம் மோசடி, குடும்பத்தகராறு உள்ளிட்ட பிரச்னைகள் வந்தன. இந்த புகார்களில் சில மனுக்கள் மீது சமரச தீர்வு காணபட்டது.
எஸ்.பி.சந்தீஷ் பேசுகையில், இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்னைகள் சம்பந்தமாக ராமநாதபுரத்திற்கு வருகின்றனர். இதனால் வீண் அலைச்சல், பணம் விரயமாகிறது. ஆகவே வாரந்தோறும் செவ்வாய் அன்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை பெட்டிஷன் மேளா நடைபெறும். இங்கு குறைகளை தெரிவிக்கலாம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் என்னிடம் நேரில் தெரிவிக்கலாம் என்றார்.டி.எஸ்.பி. நிரேஷ் மற்றும் இன்ஸ்பெகடர்கள், எஸ்.ஐ.க்கள் பங்கேற்றனர்.