/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உறிஞ்சுகுழி அமைத்த தொகை பெறுவதற்கு அலைக்கழிப்பு உறிஞ்சுகுழி அமைத்த தொகை பெறுவதற்கு அலைக்கழிப்பு
உறிஞ்சுகுழி அமைத்த தொகை பெறுவதற்கு அலைக்கழிப்பு
உறிஞ்சுகுழி அமைத்த தொகை பெறுவதற்கு அலைக்கழிப்பு
உறிஞ்சுகுழி அமைத்த தொகை பெறுவதற்கு அலைக்கழிப்பு
ADDED : ஜூன் 21, 2024 04:00 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள கிராமங்களில் குடிநீர் பைப் லைன் அருகே மற்றும் அடிபம்பு அருகே தனி நபர்களுக்கான உறிஞ்சு குழி அமைக்கும் திட்டம் 2022 முதல் நடைமுறையில் உள்ளது.
ஐந்து அடி நீளத்திற்கு பிளாட்பாரம் அமைத்து அதன் அருகே மூன்றடி நீள அகலத்தில் குழி தோண்டப்படுகிறது. அவற்றில் ஜல்லிக்கற்கள் நிரப்புகின்றனர். பைப்பில் இருந்து வீணாக கசியும் நீர் நேரடியாக உறிஞ்சு குழியில் விழுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்திற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிக்கு எத்தனை உறிஞ்சி குழி தேவை என்பதை பி.டி.ஓ., மூலம் கலெக்டருக்கு பரிந்துரை செய்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறிஞ்சுகுழி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திருப்புல்லாணி யூனியனில் கடந்த மூன்றாண்டுகளில் ஒரு ஊராட்சிக்கு 375 வீதம் வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான தொகை பெறுவதற்கு உரியவர்களை கவனித்தால் மட்டுமே நடக்கும் என பாதிக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.
ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சு குழாய் அமைப்பதற்கு ரூ.14000 செலவாகிறது. இதற்கான தொகை பெறுவதற்கு கடந்த ஆறு மாதங்களாக யூனியன் அலுவலகத்திற்கு தொடர்ந்து செல்ல வேண்டி உள்ளது.
பி.டி.ஓக்கள் பில் அனுமதித்தாலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சில பணியாளர்கள் தங்களை கவனித்தால் மட்டுமே இதற்கான தொகை விடுவிக்கப்படும் என நேரடியாகவே கூறுகின்றனர். எனவே கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.