/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வி.ஏ.ஓ.,க்கள் அலைபேசி சிம் கார்டை திருப்பி ஒப்படைத்து போராட்டம் வி.ஏ.ஓ.,க்கள் அலைபேசி சிம் கார்டை திருப்பி ஒப்படைத்து போராட்டம்
வி.ஏ.ஓ.,க்கள் அலைபேசி சிம் கார்டை திருப்பி ஒப்படைத்து போராட்டம்
வி.ஏ.ஓ.,க்கள் அலைபேசி சிம் கார்டை திருப்பி ஒப்படைத்து போராட்டம்
வி.ஏ.ஓ.,க்கள் அலைபேசி சிம் கார்டை திருப்பி ஒப்படைத்து போராட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:21 PM

திருவாடானை : டிஜிட்டல் பயிர் ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.ஏ.ஓ.,க்கள் அலைபேசி சிம்கார்டுகளை தாலுகா அலுவலகத்தில் திருப்பி ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பயிர் டிஜிட்டல் கிராப் சர்வே என்ற திட்டத்தில் ஒவ்வொரு வி.ஏ.ஓ., வும் அலைபேசி ஆப் மூலம் நேரடியாக விவசாயி பயிரிட்டுள்ள நிலத்திற்கே சென்று அங்கிருந்து அலைபேசி ஆப்பை ஆன் செய்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
அதன் பிறகு வி.ஏ.ஓ.,க்கள் அந்தந்த வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அடங்கல் கணக்குகளில் பயிர், பயிரிட்ட பரப்பு விபரங்களை ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக அனைத்து வி.ஏ.ஓ.,க்களுக்கும் புதிய சிம்கார்டு வழங்கப்பட்டது. இந்த பணிக்காக உதவியாளர்களை நியமித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அரசால் வழங்கப்பட்ட சிம் கார்டு செயல்படாததோடு, இப்பணிக்கு நியமிக்கப்பட்ட உதவியாளர்களுக்கு சம்பளம், எந்தவித தொழில்நுட்ப கருவிகளும் வழங்காததை கண்டித்தும், மாநில செயற்குழு தீர்மானத்தின் படி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் நம்புராஜேஸ் தலைமை வகித்தார். வட்டார தலைவர் சண்முகம் மற்றும் வி.ஏ.ஓ.க்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தலைமையிடத்து துணை தாசில்தார் நாகராஜிடம் அரசால் வழங்கப்பட்ட அலைபேசி சிம் கார்டுகளை திருப்பி ஒப்படைத்தனர்.