/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வேளாண் விளைபொருட்களில் மதிப்புக்கூட்டல் பயிற்சி வேளாண் விளைபொருட்களில் மதிப்புக்கூட்டல் பயிற்சி
வேளாண் விளைபொருட்களில் மதிப்புக்கூட்டல் பயிற்சி
வேளாண் விளைபொருட்களில் மதிப்புக்கூட்டல் பயிற்சி
வேளாண் விளைபொருட்களில் மதிப்புக்கூட்டல் பயிற்சி
ADDED : ஜூலை 22, 2024 04:42 AM
உச்சிபுளி: ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி வட்டாரத்தில் வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு விளைபொருட்களில் மதிப்புக்கூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் முகவை உழவர் உற்பத்தியாளர் குழு முதன்மை செயல் அலுவலர் சுரேஷ் மதிப்புக்கூட்டல் முறைகளையும் அதன் பயன்களை எடுத்துரைத்தார்.
உதவி வேளாண் அலுவலர் மோகன்ராஜ் பேசுகையில், விலை வீழ்ச்சி காலங்களில் விவசாயிகள் கிட்டங்கியில் விளைப் பொருட்களை நாள் ஒன்றுக்கு குவிண்டாலுக்கு 10 பைசா வீதமும், வாடகைக்கும் அதிகபட்சமாக 180 நாட்கள் கிட்டங்கிகளை பயன்படுத்தாலம் என்றார்.
மாவட்ட வள அலுவலர் கார்த்திக் பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் பயன்கள், தகுதிகள், தேவையான ஆவணங்கள் பற்றி பேசினார்.
இப்பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, உதவி மேலாளர் பவித்ரன், விவசாயிகள் பங்கேற்றனர்.