/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அக்னி தீர்த்தம் அருகில் பயனற்ற கழிப்பறை அக்னி தீர்த்தம் அருகில் பயனற்ற கழிப்பறை
அக்னி தீர்த்தம் அருகில் பயனற்ற கழிப்பறை
அக்னி தீர்த்தம் அருகில் பயனற்ற கழிப்பறை
அக்னி தீர்த்தம் அருகில் பயனற்ற கழிப்பறை
ADDED : ஜூன் 27, 2024 05:35 AM

ராமேஸ்வரம் : -ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம் கடற்கரையில் பயன்பாடின்றி கழிப்பறை மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவார்கள்.
இதில் வயதான பக்தர்கள், குழந்தைகள் நீராடுவதால் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அக்னி தீர்த்த கடற்கரையில் திறந்த வெளியில் செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.
இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்தது. இதனை தவிர்க்க 6 மாதம் முன்பு அக்னி தீர்த்த கடற்கரையில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.50 லட்சத்தில் இருபாலருக்கும் கழிப்பறை கூடம் அமைத்தனர்.
கட்டடம் பணி முடிந்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் மூடிக் கிடக்கிறது.
இதனால் கழிப்பறை கதவுகள் துருப்பிடித்தும், கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலே வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இக்கழிப்பறை கூடம் அருகில் மத்திய சுற்றுலா நிதியில் அமைத்த உடை மாற்றும் அறையும் 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமலே முடங்கி கிடக்கிறது.
எனவே கழிப்பறை கட்டடம், உடைமாற்றும் அறையை பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.