/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பராமரிப்பு இல்லாமல் வீணாகும் ஊரணிக்கோட்டை தெப்பக்குளம் பராமரிப்பு இல்லாமல் வீணாகும் ஊரணிக்கோட்டை தெப்பக்குளம்
பராமரிப்பு இல்லாமல் வீணாகும் ஊரணிக்கோட்டை தெப்பக்குளம்
பராமரிப்பு இல்லாமல் வீணாகும் ஊரணிக்கோட்டை தெப்பக்குளம்
பராமரிப்பு இல்லாமல் வீணாகும் ஊரணிக்கோட்டை தெப்பக்குளம்
ADDED : ஜூலை 11, 2024 04:56 AM

திருவாடானை: திருவாடானை அருகே ஊரணிக்கோட்டை கிராமத்தில் உள்ள தெப்பக்குளம் புதர் மண்டி பயன்பாடின்றி உள்ளது.
திருவாடானை அருகே ஊரணிக்கோட்டையில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் முன்பு பழமையான தெப்பக்குளம் உள்ளது. இதில் சீமைக்கருவேலம் மரங்கள் அடர்ந்து அழுகிய நிலையில் காணப்படுகிறது.
கிராம மக்கள் கூறுகையில், இந்த தெப்பக்குளம் தண்ணீர் குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்தது.
முட்புதர்கள் அடர்ந்தும், குளத்திற்கு வரும் வரத்து கால்வாய் துார்ந்து விட்டதால் குளம் நிரம்பவில்லை.
இதனால் பயன்பாடில்லாமல் உள்ளது.
இந்த தெப்பக்குளம் நிரம்பும் பட்சத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தண்ணீர் சேகரித்து செல்வார்கள்.
குளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.