/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பூவாணி கிராமத்திற்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல் பூவாணி கிராமத்திற்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
பூவாணி கிராமத்திற்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
பூவாணி கிராமத்திற்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
பூவாணி கிராமத்திற்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 11, 2024 10:48 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பூவாணி கிராமத்திற்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அதனை சீரமைக்க மக்கள் வலியுறுத்தினர்.
பூவாணி கிராமத்திற்கு செல்லும் ரோடு லேசான மழை பெய்தாலே டூ வீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இப்பாதையை பயன்படுத்தும் பூவாணி, கொக்கூரணி, செட்டியகோட்டை, காவனக்கோட்டை உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யூனியன் அதிகாரிகள் முதல் முதல்வரின் தனிப்பிரிவு வரை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், கிராமத்தினர் சார்பாக அப்பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வம், ஜமாபந்தியில் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் சாலையை சீரமைக்க வேண்டி மனு அளித்துள்ளார்.