/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பஸ் ஸ்டாப் அருகே எரியாத மின் விளக்குகள் பஸ் ஸ்டாப் அருகே எரியாத மின் விளக்குகள்
பஸ் ஸ்டாப் அருகே எரியாத மின் விளக்குகள்
பஸ் ஸ்டாப் அருகே எரியாத மின் விளக்குகள்
பஸ் ஸ்டாப் அருகே எரியாத மின் விளக்குகள்
ADDED : ஜூலை 28, 2024 11:52 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் அருகே சென்டர் மீடியன் மின்விளக்கு பழுதாகி பலமாதங்களாக எரியவில்லை. இரவில் பஸ்சிற்காக காத்திருக்கும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.
ராமநாதபுரம் மதுரை ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவில்பஸ் ஸ்டாப் அருகே சென்டர்மீடியன் மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளன.
இரவு நேரத்தில் இருட்டில் கால்நடைகள், நாய்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து நடக்கிறது. பஸ்சிற்காக காத்திருக்கும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.
இதுதொடர்பாக பலமுறை தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே உடனடியாக மதுரை நெடுஞ்சாலையில் பழுதான மின்விளக்குகளுக்கு பதிலாக புதிதாக மாற்ற வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.