/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் முன்னறிவிப்பின்றி ரயில் தண்டவாள சீரமைப்பு பணி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவதி பரமக்குடியில் முன்னறிவிப்பின்றி ரயில் தண்டவாள சீரமைப்பு பணி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவதி
பரமக்குடியில் முன்னறிவிப்பின்றி ரயில் தண்டவாள சீரமைப்பு பணி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவதி
பரமக்குடியில் முன்னறிவிப்பின்றி ரயில் தண்டவாள சீரமைப்பு பணி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவதி
பரமக்குடியில் முன்னறிவிப்பின்றி ரயில் தண்டவாள சீரமைப்பு பணி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 25, 2024 04:05 AM

பரமக்குடி: பரமக்குடி ரயில்வே கிராசிங் தண்வாளம் பராமரிப்பு பணிகள் முன்னறிவிப்பின்றி செய்வதால் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
மதுரை- ராமேஸ்வரம் ரயில் மார்க்கம் முற்றிலும் மின் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாம்பன் பாலம் பணிகள் நிறைவு பெறும் சூழலில் அனைத்து வகையான ரயில்களும் வந்து செல்லும்.
பாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு ரயில்வே கிராசிங் பகுதியிலும் சிமென்ட் தளங்கள் சீரமைப்பு பணிகள் நடக்கிறது.
குறிப்பிட்ட நாட்கள் முன்பாக முன்னறிவிப்பு செய்யப்படாமல் திடீரென சிறிய ரக பேனர்கள் மூலம் ரயில்வே துறை அறிவிப்பு பேனர் கட்டி வைக்கின்றனர். இது போன்ற பேனர்கள் கண்ணில் படுமாறு இருப்பதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சோமநாதபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தெளிச்சாத்தநல்லுார் பகுதி நான்கு வழிச்சாலையை சுற்றி பல கி.மீ., பயணிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் பெண்கள் உட்பட மாணவர்கள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ஆகவே விடுமுறை நாட்களில் பணிகளை மேற்கொள்வதோடு, தேவையான முன்னறிவிப்பு செய்து பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்க வேண்டும், என ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.