ADDED : ஜூன் 11, 2024 10:52 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் உபரியாக இருந்த 28 பட்டதாரி ஆசிரியர்கள்தேவையுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் துவக்கப்பள்ளி 1026, நடுநிலைப்பள்ளி -208, உயர்நிலை -113, மே.நி., பள்ளி-173, என 1524 பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10ல்ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் உள்ள அனைத்துபள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1:40, 1:35 என்ற விகிதாசார அடிப்படையில் உபரியாக இருந்த 28 ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் தேவையுள்ள பிற பள்ளிகளுக்கு கவுன்சிலிங் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.