/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் வாகன நெரிசல் பள்ளி மாணவர்கள் தவிப்பு பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் வாகன நெரிசல் பள்ளி மாணவர்கள் தவிப்பு
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் வாகன நெரிசல் பள்ளி மாணவர்கள் தவிப்பு
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் வாகன நெரிசல் பள்ளி மாணவர்கள் தவிப்பு
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் வாகன நெரிசல் பள்ளி மாணவர்கள் தவிப்பு
ADDED : ஜூன் 13, 2024 05:48 AM

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறை பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் பெரிய பஜார் உள்ளிட்ட குறுகலான பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் நெரிசலை தவிர்க்கும் வகையில் வைகை ஆறு கரையோரம் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது.
இதன்படி பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆறு படித்துறையில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. இதே ரோட்டில் வழிபாட்டுத் தலங்கள், மஹால்கள் என வரிசையாக உள்ளது. ரோடு குறுகிய அளவில் உள்ள சூழலில் ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.
பள்ளிக்கு தினமும் சைக்கிளில் மாணவர்கள் வருவதுடன், டூவீலர், ஆட்டோ, பள்ளி வாகனங்கள் என ரோடு பிஸியாகவே இருக்கிறது. இந்நிலையில் விசேஷ நாட்களில் மஹால்களுக்கு முன்பு பந்தல் அமைப்பதுடன், பிளக்ஸ் பேனர்களை கட்டி வைப்பதால் ரோடு 5 அடி வரை சுருங்குகிறது. ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்துவதால் நடக்கக்கூட வழியின்றி உள்ளது.
இதனால் மாணவர்கள் நெரிசலுக்கு மத்தியில் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர். எனவே ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்றி, பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பந்தல்கள் அமைப்பதை முறைப்படுத்த நகராட்சி, போக்குவரத்து போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.