Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஜூன் 5ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4  இலவச மாதிரி தேர்வு 

ஜூன் 5ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4  இலவச மாதிரி தேர்வு 

ஜூன் 5ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4  இலவச மாதிரி தேர்வு 

ஜூன் 5ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4  இலவச மாதிரி தேர்வு 

ADDED : ஜூன் 02, 2024 03:31 AM


Google News
ராமநாதபுரம்: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு ஜூன் 5ல் நடக்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மைய நுாலகர் இளங்கோ கூறியிருப்பதாவது:

அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு ஜூன் 9ல் நடக்கவுள்ளது.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலகம், சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்., பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச மாதிரி தேர்வு ஜூன் 5ல் மாவட்ட மைய நுாலகத்தில் காலை 10:00 மணிக்கு நடக்கவுள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

அலைபேசி எண்களான 94864 83723, 94423 21554, 99407 60347 எண்களில் தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us