/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முத்துப்பேட்டையில் திருஇருதய பெருவிழா முத்துப்பேட்டையில் திருஇருதய பெருவிழா
முத்துப்பேட்டையில் திருஇருதய பெருவிழா
முத்துப்பேட்டையில் திருஇருதய பெருவிழா
முத்துப்பேட்டையில் திருஇருதய பெருவிழா
ADDED : ஜூன் 25, 2024 11:00 PM
பெரியபட்டினம்: முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் திரு இருதய பெருவிழா மற்றும் துறவற வாழ்வில் பொன்விழா நிகழ்ச்சி நடந்தது.
பாதிரியார் ஆர்.கசிமீர் சகாய நாதன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் வட்டார அதிபர் சிங்கராயர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர்கள் கிறிஸ்தாமஸ், ஸ்டீபன் சவரி ராஜ், முத்துப்பேட்டை பங்குத்தந்தை சவரிமுத்து, அம்புரோஸ், ஆசிரியர் பீட்டர் பால் சகாயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜோசப் பீட்டர் ராஜா நன்றி கூறினார்.
துறவற வாழ்வில் பொன்விழா கண்ட பாதிரியார் கசிமீர் சகாய நாதனுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முத்துப்பேட்டை பங்கு இறை மக்கள் மற்றும் கிராம மக்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.