/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை
ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை
ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை
ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை
ADDED : ஜூலை 09, 2024 05:01 AM
சிக்கல்: சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
இருந்தும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் அன்றாட பயன்பாட்டிற்கான குடிநீர் வசதி இல்லாத நிலை உள்ளது. நோயாளிகள் கூறியதாவது:
சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். இங்கு டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளது.
குடிப்பதற்கு தண்ணீர் வசதி கூட இல்லாத நிலை உள்ளது. எனவே சிக்கல் ஊராட்சி நிர்வாகம் காவிரி குடிநீர் இணைப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அமைத்திட வேண்டும். குறைகளை நிவர்த்தி செய்ய மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.