ADDED : ஜூன் 15, 2024 06:49 AM
தொண்டி : தொண்டி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு டூவீலரில் இருவர் பெட்ரோல் போட சென்றனர்.
அப்போது டூவீலரை ஓட்டி வந்தவர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த போது பின்னால் அமர்ந்திருந்தவர் பெட்ரோல் பங்க் உள்ளே சென்று பணப்பெட்டியில் ரூ.17 ஆயிரத்தை திருடிச் சென்றார்.
அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் இது பதிவாகிய நிலையில் இந்த வீடியோ பரவியது. தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.