/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கூட்டம் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கூட்டம்
தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கூட்டம்
தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கூட்டம்
தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கூட்டம்
ADDED : ஜூன் 11, 2024 10:55 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் கிளை பணிமனை முன்பு சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் போஸ் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ராம்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய சங்க தலைவர் ராஜன் பொது செயலாளர் தெய்வீரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வாயில் கூட்டத்தில் ஜூன் 24 ல் கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கவுள்ள 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், பழைய பென்சன் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். உதிரி பாகங்கள் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.