/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பஸ் ஸ்டாண்டில் பஸ்களை பதம் பார்க்கும் கம்பிகள் தேவிபட்டினத்தில் சிரமம் பஸ் ஸ்டாண்டில் பஸ்களை பதம் பார்க்கும் கம்பிகள் தேவிபட்டினத்தில் சிரமம்
பஸ் ஸ்டாண்டில் பஸ்களை பதம் பார்க்கும் கம்பிகள் தேவிபட்டினத்தில் சிரமம்
பஸ் ஸ்டாண்டில் பஸ்களை பதம் பார்க்கும் கம்பிகள் தேவிபட்டினத்தில் சிரமம்
பஸ் ஸ்டாண்டில் பஸ்களை பதம் பார்க்கும் கம்பிகள் தேவிபட்டினத்தில் சிரமம்
ADDED : ஜூலை 18, 2024 09:54 PM

தேவிபட்டினம்: தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்ட் தரைதளத்தில் பள்ளத்தில் உள்ள கம்பிகளால் பஸ் டயர்கள் பதம் பார்க்கப்படுவதால் டிரைவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையும், திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையும் இணையும் பகுதியாக தேவிபட்டினம் உள்ளது.
இரண்டு ரோடுள் வழியாக வரும் பஸ்கள், தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் இணைந்து அங்கிருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்கின்றன.
இதனால் தேவிபட்டினம் பஸ்ஸ்டாண்டில் பஸ்போக்குவரத்து அதிகம் உள்ளது. மேலும் தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளதால் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தேவிபட்டினம் பஸ்ஸ்டாண்ட் தரைத்தளத்தில் நீண்ட நாட்களாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த பள்ளங்களில் உள்ள பில்லர் இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டியவாறு உள்ளன.
இரவு நேரங்களில் பள்ளங்கள் தெரியாமல் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் பஸ்கள் வந்து செல்லும் நிலையில் பஸ்களின் டயர்கள் கம்பிகளால் சேதம் அடைகின்றன. இதனால் பஸ் டிரைவர்கள் கம்பிகளில் இருந்து பஸ் டயர்களை பாதுகாக்கும் விதமாக கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.