/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பழமை மாறாத பூம்பூம் மாட்டுடன் ஊர்வலம் நான்கு மாதங்களுக்கு பயணம் தொடர்கிறது பழமை மாறாத பூம்பூம் மாட்டுடன் ஊர்வலம் நான்கு மாதங்களுக்கு பயணம் தொடர்கிறது
பழமை மாறாத பூம்பூம் மாட்டுடன் ஊர்வலம் நான்கு மாதங்களுக்கு பயணம் தொடர்கிறது
பழமை மாறாத பூம்பூம் மாட்டுடன் ஊர்வலம் நான்கு மாதங்களுக்கு பயணம் தொடர்கிறது
பழமை மாறாத பூம்பூம் மாட்டுடன் ஊர்வலம் நான்கு மாதங்களுக்கு பயணம் தொடர்கிறது
ADDED : ஜூன் 14, 2024 04:41 AM

ரெகுநாதபுரம்: சித்திரை முதல் ஆடி மாதம் வரை பூம்பூம் மாடுடன் வலம் வருகின்றனர்.
அழகர் மாடு என்றழைக்கப்படும் பூம்பூம் மாட்டை சுற்றுவட்டார கிராமங்களுக்கு அழைத்து சென்று அங்கு வழங்கக்கூடிய நெல் மற்றும் சிறுதானியங்கள் பெற்றுக் கொண்டும் மாட்டுக்கு தேவையான வைக்கோலை வாங்கிக் கொண்டும் செல்கின்றனர்.
கையில் மேளம் இசைத்தவுடன் அதற்கு தகுந்தவாறு தலையை ஆட்டி ஆட்டி ஆசி வழங்குவது போல் மாடு செல்கிறது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே புலியடித்தான் கோட்டையைச் சேர்ந்த கண்ணன் 25, கூறியதாவது:
பரமக்குடியில் உள்ள மண்டகப்படி சித்திரை விழாவிற்கு அழகர் ஆற்றில் இறங்கும் சமயத்தில் இங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டுடன் செல்வோம். ஒவ்வொரு கிராமங்களிலும் காணிக்கை மற்றும் தானியங்களை பெற்றுச் சென்று ஆடி மாதம் வரை ஒவ்வொரு கிராமமாக சென்று பின்னர் சொந்த ஊர் திரும்புகிறோம்.
அதன் பிறகு சீமைக் கருவேல மரங்கள் வெட்டுதல் உள்ளிட்ட விவசாய கூலி வேலைகளை செய்கிறோம். இது பாரம்பரியமாக குடும்பமாக தங்கியிருந்து பூம்பூம் மாட்டுடன் சென்று வருகிறோம் என்றார்.