/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நோய் தாக்கிய தெருநாய்களால் அச்சத்தில் பேரையூர் மக்கள் நோய் தாக்கிய தெருநாய்களால் அச்சத்தில் பேரையூர் மக்கள்
நோய் தாக்கிய தெருநாய்களால் அச்சத்தில் பேரையூர் மக்கள்
நோய் தாக்கிய தெருநாய்களால் அச்சத்தில் பேரையூர் மக்கள்
நோய் தாக்கிய தெருநாய்களால் அச்சத்தில் பேரையூர் மக்கள்
ADDED : ஜூன் 04, 2024 05:58 AM

கமுதி : கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோட்டில் தோல் உரிந்த நிலையில் நோய் தாக்கம் ஏற்பட்டு உலாவரும் நாயால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
கமுதி--முதுகுளத்துார் ரோடு பேரையூர் அய்யனார்புரத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு விடுதிகள்,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.இப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.
பஸ் ஸ்டாண்ட், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள், பொதுமக்களும் நடந்து செல்வதற்கு முகம் சுழிக்கின்றனர். தெருநாய்களால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
பள்ளி திறப்பதற்கு முன்பு நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கு சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.