Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புறம்போக்கு இடங்கள் பட்டாவாகியது தீவனம் இன்றி திரியும் கால்நடைகள்

புறம்போக்கு இடங்கள் பட்டாவாகியது தீவனம் இன்றி திரியும் கால்நடைகள்

புறம்போக்கு இடங்கள் பட்டாவாகியது தீவனம் இன்றி திரியும் கால்நடைகள்

புறம்போக்கு இடங்கள் பட்டாவாகியது தீவனம் இன்றி திரியும் கால்நடைகள்

ADDED : ஜூன் 03, 2024 02:46 AM


Google News
திருவாடானை: அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கி விட்டதால் கால்நடைகள் மேய்யலுக்கு இடமின்றி சாலைகளில் சுற்றி திரிகின்றன.

திருவாடானை தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் உட்பட பலவகையான நிலங்களில் ஏராளமானோருக்கு அரசு பட்டா வழங்கபட்டுள்ளது. பட்டா வாங்கியவர்கள் அந்தந்த வி.ஏ.ஓ.க்களை கவனித்து அதற்கான வரி ரசீது பெற்றுள்ளனர்.

நம்புதாளை கிராம மக்கள் கூறியதாவது- புறம்போக்கில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம் என அரசு உத்தரவுள்ளது.

ஆனால் அதை முறையாக பின்பற்றாமல் மேய்ச்சல் புறம்போக்கு, குளம், குட்டை, ஆறு என நீர் நிலைகளில் உள்ள புறம்போக்கு இடங்களுக்கும் பட்டா வழங்குவதால் தீவனமின்றி கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன.

நம்புதாளையில் பல நுாறு ஏக்கர் புறம்போக்கு இடங்களுக்கு பட்டா வழங்கபட்டுள்ளது. இதனால் புதிய ரேஷன்கடை கட்டுவதற்கு கூட இடம் கிடைக்கவில்லை.

இடத்தை தேடி அலுவலர்கள் அலைகின்றனர். ஊருணியை சுற்றி பட்டா வழங்கிவிட்டதால் மழை காலங்களில் வரத்து கால்வாய் வழியாக ஊருணிக்கு தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளும் அதிகமாக உள்ளது. ஆறு ஓரங்களில் ஆக்கிரமிப்பு இருப்பதால் மழை நீர் சுலபமாக செல்லமுடியாமல் குடியிருப்புகளுக்குள் செல்கிறது.

மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us